TNPSC Thervupettagam

பிரோஷ் ஜீஜீபோய் கோபுரங்கள் டிரேடுமார்க் முத்திரை

July 21 , 2018 2180 days 662 0
  • மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள தலால் தெருவில் அமைந்துள்ள மும்பை பங்குச் சந்தையின் கட்டிடமான பிரோஷ் ஜீஜீபோய் கோபுரங்கள், டிரேடு மார்க் சட்டம், 1999-ன் கீழ் அதன் சிறப்பான கட்டிட அமைப்பிற்காக டிரேடுமார்க் முத்திரையினைப் பெற்றுள்ளது.
  • இதனுடன் உலகில் டிரேடுமார்க் உரிமையைப் பெற்ற புகழ்பெற்ற கட்டிடங்களின் சிறப்புப் பட்டியலில் பிரோஷ் ஜீஜீபோய் இணைந்துள்ளது.
  • மும்பையின் தாஜ்மஹால் தங்கும் விடுதியே டிரேடு மார்க் சட்டம், 1999 - ன் கீழ் ஜூன் 2017-ல் டிரேடுமார்க் முத்திரையினை இந்தியாவிலேயே முதல் முறையாக பெற்ற கட்டிடம் ஆகும்.
  • உலகில் டிரேடுமார்க் முத்திரையினைப் பெற்ற மற்ற கட்டிடங்கள்
    • அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடம்
    • பிரான்சின் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரம்
    • ஆஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள ஒப்ரா ஹவுஸ் மற்றும் பல.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்