TNPSC Thervupettagam

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023

September 19 , 2023 307 days 247 0
  • 1969 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, முதல் முறையாக இந்த 54 ஆண்டுகாலச் சட்டத்தினை திருத்தியமைப்பதற்கான ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளின் மாநில மற்றும் தேசிய அளவிலான தரவுத்தளத்தை உருவாக்குவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இச்சட்டம் அமலுக்கு வர உள்ளது.
  • கல்வி நிறுவனத்தில் சேர்க்கை, ஓட்டுநர் உரிமம் வழங்குதல், வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஆதார் எண், திருமணப் பதிவு அல்லது அரசுப் பணி நியமனம் போன்றவற்றிற்கு ஒரே ஆவணமாகப் பிறப்புச் சான்றிதழை பயன்படுத்த இது வழி வகுக்கிறது.
  • இது தத்தெடுக்கப்பட்ட, ஆதரவற்ற, கைவிடப்பட்ட, காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்ட, வாடகைத்தாய் முறை மூலம் பெறப்பட்ட குழந்தை மற்றும் தனி ஒரு பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தை ஆகியோரின் தகவலைப் பதிவு செய்யும் செயல்முறையை எளிதாக்குகிறது.
  • பேரிடர் அல்லது பெருந்தொற்றுகள் ஏற்பட்டால், அதனால் ஏற்படும் இறப்புகளை விரைவாகப் பதிவு செய்வதற்கும் சான்றிதழ்களை வழங்குவதற்கும் சிறப்பு "துணைப் பதிவாளர்களை" நியமிப்பதற்கு இது வழி வகுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்