TNPSC Thervupettagam

பிலிப்பைன்ஸில் நான்காவது ஆசியான்-பிளஸ் பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாடு

October 25 , 2017 2636 days 836 0
  • நான்காவது ஆசியான்-பிளஸ் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான மாநாடு பிலிப்பைன்ஸில் நடந்தது.
  • மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டார். இதுவே அவருக்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் முதல் வெளிநாட்டுப் பயணமாகும்.
  • ஆசியான்-பிளஸ் என்பது தென்கிழக்கு ஆசியப் பகுதியில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றிற்காக பத்து ஆசியான் உறுப்பு நாடுகள் மற்றும் அதன் எட்டு பேச்சுவார்த்தை உறுப்பினர்கள் இடையே பாதுகாப்பை பலப்படுத்தவும் இராணுவ ஒத்துழைப்பு நடவடிக்கையை மேம்படுத்தவும் உதவும் ஒரு அமைப்பு ஆகும்.
  • இதன் நோக்கம் யாதெனில் சீரிய பேச்சுவார்த்தை மற்றும் வெளிப்படைத்தன்மை மூலம் இராணுவ அமைப்புகளிடையே பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்துவது ஆகும்.
ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாடு
  • ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாடு என்பது ஆசியான் நாடுகளிடையே பாதுகாப்பு விஷயத்தில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் ஒரு உயர்மட்ட ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பு அமைப்பாகும்.
  • இதன் குறிக்கோள்கள்கள் 2006ம் ஆண்டு மே மாதம் 9ம் தேதி அன்று நடந்த துவக்க மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
  • ஏசியான் பிளஸ் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான மாநாட்டின் துவக்க கூட்டம் 2010ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி அன்று அயல்நாடின் ஹனோயில் நடத்தப்பட்டது. அன்று பாதுகாப்பு அமைச்சர்கள், இந்த புதிய ஏற்பாட்டின் கீழ் ஐந்து முக்கிய விஷயங்களில் யதார்த்தமான ஒத்துழைப்பினை தொடர ஒத்துக் கொண்டனர். அவையாவன கடல்வழிப் பாதுகாப்பு, தீவிரவாதத் தடுப்பு, மனிதாபிமான அடிப்படையில் உதவி, மற்றும் பேரிடருக்கான தீர்வுகள், அமைதிகாப்பு நடவடிக்கைகள், இராணுவ மருத்துவம் ஆகியவையாகும்.
  • இந்த அமைப்பு (ADMM PLUS) புருனை தாருசலேம், கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய பத்து ஏசியான் உறுப்பு நாடுகளையும், ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா ஐப்பான், நியூசிலாந்து, தென் கொரியக் குடியரசு, ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் அமெரிக்கா ஆகிய எட்டு நாடுகளையும் உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்