TNPSC Thervupettagam

பிலிப்பைன்ஸுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகள் வழங்கல்

April 23 , 2024 218 days 311 0
  • இந்திய நாடானது, சமீபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பிரம்மோஸ் மீயொலி சீர்வேக எறிகணைகளின் முதல் தொகுதியை வழங்கியுள்ளது.
  • இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ஒரு கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட எறிகணையினை இந்தியா ஏற்றுமதி செய்யும் முதல் நாடு பிலிப்பைன்ஸ் ஆகும்.
  • பிரம்மோஸ் என்பது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் ரஷ்யாவின் NPO மசினோஸ்ட்ரோயேனியா ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியால் உருவாக்கப் பட்டதாகும்.
  • இந்த எறிகணைக்கு, பிரம்மபுத்திரா மற்றும் மாஸ்க்வா ஆகிய நதிகளின் பெயரால் பெயரிடப் பட்டுள்ளது.
  • இந்த எறிகணையானது, மேற்பரப்பு மற்றும் கடல் சார் இலக்குகளுக்கு எதிராக நிலம், கடல், கடல் சார் பகுதிகள் மற்றும் வான்வழி ஆகியவற்றிலிருந்து ஏவக்கூடிய திறன் கொண்டது என்பதோடு இது இந்திய ஆயுதப் படைகளால் வெகு நீண்ட காலமாக பயன்படுத்தப் பட்டு வருகிறது.
  • எறிகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பின் விதிகளின் படி எறிகணையின் வரம்பு முதலில் 290 கி.மீ. ஆக நிர்ணயிக்கப்பட்டது.
  • 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தியா இக்குழுவில் இணைந்ததைத் தொடர்ந்து, இதன் வரம்பு 450 கி.மீ. வரை நீட்டிக்கப்பட்டுள்ளதோடு மேலும் அதை 600 கி.மீ. மற்றும் அதற்கு மேலான தூர வரம்பிற்கு நீட்டிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்