இந்த நிதியாண்டு நிறைவு பெறும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 40 பில்லியன் டிஜிட்டல் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கடந்த நிதியாண்டின் முடிவில், 30 பில்லியன் டிஜிட்டல் வணிக நடவடிக்கைகள் என்ற இலக்கு இருந்தது. இந்த இலக்கில் 90 முதல் 95 சதவீகிதம் வரை பூர்த்தி செய்யப்பட்டு விட்டன.
டிஜிட்டல் பண வழங்கீடுகளின் வெற்றிக்கான முக்கியக் கூறாக கைபேசி பணப்பைகள் மற்றும் ஒருங்கிணைந்த பணவழங்கீட்டு இடைமுகம் ஆகியவை கருதப்படுகின்றன.