TNPSC Thervupettagam

பிளாக் பாரஸ்ட் கோப்பை

July 1 , 2019 1847 days 728 0
  • இந்தியாவின் இளையோர் பெண் குத்துச் சண்டை வீரர்கள் ஜெர்மனியின் வில்லிங்கென் - ஸ்வென்னிங்கெனில் நடைபெற்ற பிளாக் ஃபாரஸ்ட் கோப்பைப் போட்டியில் ஐந்து தங்கம் உட்பட ஏழு பதக்கங்களை வென்றனர்.
  • மேலும் இந்த அணியானது இப்போட்டித் தொடரின் சிறந்த அணியாகவும் தேர்வு செய்யப்பட்டது.
    • ஹரியானாவின் நேஹா (54 கிலோப் பிரிவு) - சிறந்த குத்துச் சண்டையாளர்
    • கர்நாடகாவின் அஞ்சு தேவி (50 கிலோப் பிரிவு) - போட்டியின் நம்பிக்கைக்குரிய வீரர்.
  • 13 பேர் கொண்ட இந்திய அணியில் தமன்னா (48 கிலோப் பிரிவு), ப்ரீத்தி தஹியா (60 கிலோப் பிரிவு) H.அம்பேஷோரி தேவி (57 கிலோப் பிரிவு) ஆகியோர் தங்கப் பதக்கத்துடன் திரும்பிய இதர வீரர்கள் ஆவர்.
  • இந்தியா, உக்ரைன், ஜெர்மனி, கஜகஸ்தான், லாத்வியா, ஹங்கேரி, லித்துவேனியா, மங்கோலியா, கிரீஸ் மற்றும் போலந்து உள்ளிட்ட 10 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்