ஒரு பிளாக் ஸ்வான் நிகழ்வு என்பது ஒரு அசாதாரணமான, எதிர்பாராத, மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிற நிகழ்வாகும்.
இது சமூகம் மற்றும் முழு உலகின் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நிதியியல் பேராசிரியரான நாசிம் நிக்கோலஸ் தலேப், 2001 ஆம் ஆண்டில் கருப்பு அன்னம் (பிளாக் ஷ்வான் நிகழ்வு) என்ற ஒரு கருப்பொருளை முன்மொழிந்தார்.
இந்த நிகழ்வுகள் வியத்தகு முறையில் அரிதானவை, கணிக்கமுடியாதவை மற்றும் எதிர்பாராதவை ஆகிய மூன்று தனித்துவமானப் பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப் படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டு அறிக்கையின் படி குறிப்பிடத்தக்க உலகளாவிய இடர் சூழ்நிலை அல்லது "பிளாக் ஷ்வான் நிகழ்வு" ஏற்பட்டால், இந்திய நாடு ரூ.7,80,000 கோடி வரை மூலதன இழப்பினை எதிர்கொள்ள நேரிடும்.