சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரப் பிரச்சனைகளை காரணமாகக் காட்டி மகாராஷ்டிரா மாநில அரசானது கால வரம்புடைய முறையில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்குத் தடை விதித்துள்ளது.
மருந்துப் பொருட்கள், வனம் மற்றும் தோட்டக்கலை உற்பத்திப் பொருட்கள், திடக்கழிவுகள், மரக்கன்றுகள் போன்றவற்றை உறையிடப் பயன்படும் பிளாஸ்டிக்குகளுக்கு இத்தடையில் விதிவிலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
ஏற்றுமதி செயல்பாட்டிற்காக (export purposes) சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் (Special Economic Zones - SEZ) பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளின் உபயோகத்திற்கும் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலை தயாரிப்புப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்டப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் உறைகளுக்கும் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் ஊரகம் மற்றும் நகர்ப்புறம் என அனைத்துப் பகுதிகளிலும் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.