பிளாஸ்மா கதிர்களின் பின்னணியிலுள்ள அறிவியலை அறிவியலாளர்கள் வெளிக் கொணர்ந்துள்ளனர்.
பிளாஸ்மா என்பது சூரியனின் குரோமோஸ்பியர் அடுக்கில் எல்லா இடங்களிலும் ஏற்படும் மின்னூட்டம் பெற்ற துகள்களைக் கொண்ட 4 ஆம் நிலைப் பொருளாகும்.
ஜெட்ஸ் அல்லது ஸ்பிக்யூல்கள் (கதிர்கள்) மேற்பரப்பிலிருந்து தொடர்ந்து மேலே வீசப் பட்டு பின்னர் ஈர்ப்பு விசையினால் கீழே கொண்டு வரப்படுகின்ற மெல்லிய புல் போன்ற பிளாஸ்மா அமைப்புகளாகும்.
இந்த ஸ்பிக்யூல்கள் அல்லது ஜெட்கள் சுமந்து செல்லும் ஆற்றல் மற்றும் உந்தத்தின் அளவானது சூரியன் மற்றும் பிளாஸ்மா வானியல் இயற்பியலில் ஓர் அடிப்படை ஆராய்ச்சி ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது.
புலப்படக்கூடிய சூரியனின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள பிளாஸ்மாவானது சூடாக்கப் பட்ட பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரைப் போல, எப்போதும் வெப்பச் சலன நிலையிலேயே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் விவரித்துக் கூறி உள்ளனர்.