TNPSC Thervupettagam
April 13 , 2020 1690 days 614 0
  • மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருக்கும் கோவிட் - 19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அவர்களது நலத்தினை மீட்கும் வகையில் பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ள, 'மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருக்கும் கோவிட் - 19 நோயாளிகளுக்கு' ஒரு மருத்துவச் சோதனை நெறிமுறையை நிர்வகிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவானது ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த பிளாஸ்மா சிகிச்சையின் சோதனைக்கு கேரள மாநிலமானது ஒப்புதல் பெற்றுள்ளது.
  • கேரளாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சித்ரா திருநாள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் தொடங்கிய இந்த முதல் வகையான திட்டத்திற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவானது அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தச் சிகிச்சையை நிர்வகிப்பதற்கு முன்னர் மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஒப்புதல் மற்றும் நிறுவன நெறிமுறைக் குழுவின் ஒப்புதல் ஆகியவற்றை அது பெற்றிருக்க வேண்டும்.
  • இந்தச் சிகிச்சையானது வைரஸ் தொற்றிலிருந்து மீண்ட ஒரு நபரின் இரத்தத்திலிருந்து எதிர்மங்களை (Antibody) சேகரித்துக் கொள்கிறது.
  • இந்த எதிர்மங்கள் அதே வைரஸால் பாதிக்கப்பட்ட மற்றொருவருக்கு செலுத்தப் படுகிறது.
  • பி-லிம்போசைட்டுகள் எனப்படும் நோயெதிர்ப்பு உயிரணுக்களால் சுரக்கப்படும் இந்த எதிர்மங்கள், பிளாஸ்மா அல்லது இரத்தத்தின் திரவப் பகுதியில் காணப்படுகின்றன. இவை தேவைப்படும் போது இரத்தம் உறைவதற்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவதற்கும் உதவுகிறது.
  • ஒருவர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவுடன், அவர் உருவாக்கிய எதிர்மங்கள், அதே வைரஸ் திரும்பி வந்தால் அதனோடு எதிர்த்துப் போராட அவரது  இரத்தத்தில் காத்திருக்கும்.
  • இந்த நோயால் பாதிக்கப்பட்ட மற்றொருவருக்கு இது செலுத்தப்படும் போது, அந்த உடலில் இருக்கும் வைரஸை தாக்க வேண்டிய ஒன்றாக இது அதனைக் கண்டுணர்கிறது.
  • எதிர்மங்கள் வைரஸின் வெளிப்புறத்தில் உள்ள கூர்முனைகளைத் தாக்கி, அவ்வைரஸ் மனித உயிரணுக்களுக்குள் ஊடுருவாமல் தடுக்கின்றன என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
  • நலம் மீட்கும் பிளாஸ்மா சிகிச்சையானது  செயலற்ற எதிர்மச் சிகிச்சை என்றும் அழைக்கப் படுகிறது. அதாவது ஒருவருக்கு வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு எதிர்மங்களை  உடனடியாக வழங்க முடியும் என்றாலும், அந்த எதிர்மங்கள் அதைப் பெறுபவரின் உடலில் குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்