எலான் மஸ்க்கின் மூளை சில்லு உருவாக்கப் புத்தொழில் நிறுவனமான நியூராலிங்க், 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிளைண்ட்சைட் எனப்படும் அதன் செயற்கை காட்சி உருவாக்கக் கருவியினை முதல் முறையாக ஒரு மனிதனில் பொருத்துவதைப் பெரும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிளைண்ட்சைட், இரண்டு கண்களையும் பார்வை நரம்பையும் இழந்தவர்கள் கூட பார்க்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது ஒளிப்படக் கருவியிலிருந்து அனுப்பப்படும் வடிவங்களின் ஒரு அடிப்படையில் காட்சிப் (காட்சி உணர்வு) புறணியில் அமைந்துள்ள நியூரான்கள் அல்லது அதன் நரம்பு செல்களைத் தூண்டும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.