பாலி வினைல் குளோரைடு (Polyvinyl Chloride - PVC) குழாய்களில் ஒரு நிலைப்படுத்தியாக காரீயத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துவது குறித்தும் காரீயத்தின் தரங்கள் குறித்தும் ஒரு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal - NGT) மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது.
NGT ஆனது இதற்கு முன்பு பெரும்பாலான கட்டிடங்களில் தண்ணீர் செல்லும் பிவிசி குழாய்கள் காரீயம் போன்ற தீங்கிழைக்கக் கூடிய பொருட்களைக் கொண்டுள்ளதாக அறிவித்திருக்கப் பட்டிருந்தது.
காரீயம் மனிதனின் ஆரோக்கியத்தில் அபாயகரமான விளைவை ஏற்படுத்தும் திறன் கொண்டது.