நேபாள நாட்டின் பக்தாபூர் மற்றும் காத்மண்டு பள்ளத்தாக்கின் (Kathmandu valley) பிற பகுதிகளில் புகழ்பெற்ற பிஸ்கெட் ஜத்ரா திருவிழா (Bisket Jatra Festival) கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகின்ற இந்த வருடாந்திர பிஸ்கெட் ஜத்ரா திருவிழாவானது நேபாள நாட்டினுடைய பாரம்பரிய நாட்காட்டியின் புது வருடத் தொடக்கத்தைக் குறிக்கின்றது. புது வருடத் தொடக்கத்தின் நான்கு நாட்களுக்கு முன்பு பிஸ்கெட் ஜத்ரா திருவிழா தொடங்குகிறது.
இத்திருவிழாவானது மல்லா வம்சத்தின் (Malla dynasty) ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டதாக நம்பப் படுகின்றது. பைரவநாத் கடவுளின் (Lord Bhairavanath) ரத பவனி ஊர்வலம் (chariot procession) பிஸ்கெட் ஜத்ரா திருவிழாவின் முக்கிய கவன ஈர்ப்பு அம்சமாகும்.