தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முன்னாள் சட்டமன்ற சபாநாயகரான பிஎச் பாண்டியனின் சிலையையும் துணை முதல்வரான ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் பி.எச். பாண்டியனின் மணிமண்டபத்தையும் திருநெல்வேலி மாவட்டத்தின் சேரன்மாதேவியில் உள்ள கோவிந்தப்பேரியில் திறந்து வைத்தனர்.
இவர் 1985 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகராகப் பணியாற்றினார்.
இவர் திருநெல்வேலியில் 1990 ஆம் ஆண்டில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.