TNPSC Thervupettagam
September 1 , 2018 2279 days 703 0
  • ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவ நோயெதிர்ப்பியல் துறையைச் சேர்ந்த மருத்துவரான வி.எஸ்.நேகி அவர்களுக்கு 2017ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க பி.சி.ராய் விருது வழங்கப்பட்டது.
  • இந்த விருதானது, மருத்துவத் துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறப்புத் தன்மைகளை ஊக்குவிக்கும்  சிறந்த திறமையாளர்களை அங்கீகரித்திட இவருக்கு வழங்கப்பட்டது.

பி.சி.ராய் விருது

  • இந்த விருதானது, 1962ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் கழகத்தின் புகழ்பெற்ற மருத்துவரும் முன்னாள் மேற்கு வங்க முதல்வருமான மருத்துவர் பிதான்சந்திர ராய் அவர்களின் நினைவாக நிறுவப்பட்டது ஆகும்.
  • பி.சி.ராய் விருதானது, இந்தியாவிலுள்ள மருத்துவர்களுக்கான மிக உயர்ந்த அங்கீகாரமாகும்.
  • இந்த விருதானது ஆண்டுதோறும் 6 பிரிவுகளில் வழங்கப்படுகிறது. அவை,
    • இந்தியாவின் மிக உயர்ந்த ஆட்சி நிபுணர்
    • மிகச்சிறந்த மருத்துவர்
    • மருத்துவராகவும் ஆளும் மேதகத் தன்மையும் கொண்டிருத்தல்
    • மெய்யியலில் மிகச்சிறந்த நபராயிருத்தல்
    • கலையில் மிகச்சிறந்த நபராயிருத்தல்
    • அறிவியலில் மிகச்சிறந்த நபராயிருத்தல்
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்