பீகார் மாநில அரசினால் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
சுதந்திரத்திற்குப் பின் ஒரு மாநிலம் சாதிக் கணக்கெடுப்பினை மேற்கொண்ட முதல் மாநிலம் இதுவே ஆகும்.
பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 13.07 கோடிக்குச் சற்று அதிகமாக இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.
அந்த மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (36 சதவீதம்) மிகப்பெரிய சமூகப் பிரிவாக உள்ளனர்.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27.13 சதவீதமாக உள்ளதையடுத்து அப்பிரிவினர் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.
மக்கள்தொகை அடிப்படையில் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 14.27 சதவீதமாக உள்ளனர்.
பட்டியலிடப்பட்ட சாதியினர் 19.65 சதவீதம் ஆக உள்ளனர்.
சுமார் 22 லட்சம் (1.68 சதவீதம்) மக்கள் பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்.
"உயர் சாதியினர்" என்பதைக் குறிக்கும் "இட ஒதுக்கீடு பெறாத" வகையினர் மொத்த மக்கள் தொகையில் 15.52 சதவீதம் ஆக உள்ளனர்.
மொத்த மக்கள் தொகையில் 81.99 சதவீதப் பங்குடன் இந்துக்கள் பெரும்பான்மை சமூகமாக உள்ள நிலையில். அதைத் தொடர்ந்து முஸ்லிம்கள் 17.70% ஆக உள்ளனர்.
இந்த முடிவுகள் தற்போது நடைமுறையில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான இடஒதுக்கீடு மீதான 50% உச்சவரம்புக்கு சவால் விடுக்கும் வகையில் உள்ளன.