TNPSC Thervupettagam

பீகார் மாநிலம் – சிறப்பு அந்தஸ்து

December 21 , 2021 978 days 647 0
  • பீகார் மாநிலத்திற்குச் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற தனது 15 ஆண்டு கால கோரிக்கையை முதலமைச்சர் நிதீஷ்குமார் மீண்டும் எழுப்பியுள்ளார்.
  • நிதி ஆயோக் அமைப்பின் சமீபத்திய அறிக்கையானது பீகார் மாநிலத்தினை வளர்ச்சி வீதம் மற்றும் மனித மேம்பாட்டுக் குறியீடுகளின் அடிப்படையில் கீழ்நிலையிலுள்ள மாநிலமாக குறிப்பிட்டுள்ளது.
  • பீகாரின் வருடாந்திர தனிநபர் வருமானமானது தேசிய அளவை விட குறிப்பிடத்தக்க அளவில் பின்தங்கியுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, பீகார் மாநிலத்தின் மக்கள்தொகையில் 51.91 சதவிகிதம் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளனர்.
  • பள்ளிக் கல்வியிலிருந்து இடையிலேயே விலகுதல், குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு, தாய் நலம் மற்றும் சிசு இறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பீகார் மோசமான நிலையில் உள்ளது.
  • அரசியலமைப்புச் சட்டத்தில் சிறப்பு அந்தஸ்திற்கான விதிமுறைகள் எதுவும் இடம் பெற வில்லை.
  • மற்ற மாநிலங்களைவிட ஒப்பீட்டளவில் பின்தங்கிய இதர மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்கிறது.
  • இந்த வகைப்பாடானது 1969 ஆம் ஆண்டில் 5வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்  பேரில் மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்