TNPSC Thervupettagam

பீகார் மாநில அரசின் சிறப்பு அந்தஸ்து கோரிக்கை

November 29 , 2023 396 days 279 0
  • பீகாருக்கு சிறப்புப் பிரிவு அந்தஸ்து (SCS) வழங்கக் கோரி அம்மாநில அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
  • "2022 ஆம் ஆண்டு பீகார் மாநில சாதி வாரிக் கணக்கெடுப்பின்" தகவல்களின் அடிப்படையில் இந்த கோரிக்கை முன் வைக்கப்படுகிறது.
  • பீகார் மக்கள்தொகையில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் தொடர்ந்து வறுமை நிலையில் வாடுகின்றனர் என்று தெரியவந்துள்ளது.
  • சிறப்புப் பிரிவு அந்தஸ்து என்பது புவியியல் அல்லது சமூக-பொருளாதார குறைபாடுகளை எதிர்கொள்ளும் மாநிலங்களின் மேம்பாட்டிற்கு உதவுவதற்காக மத்திய அரசினால் வழங்கப்படும் ஒரு வகைப்பாடு ஆகும்.
  • ஐந்தாவது நிதிக் குழுவின் (FC) பரிந்துரையின் பேரில் 1969 ஆம் ஆண்டில் சிறப்புப் பிரிவு அந்தஸ்து அறிமுகப்படுத்தப் பட்டது.
  • சிறப்புப் பிரிவு அந்தஸ்து வழங்கப் படுவதற்கு முன் கீழ்க்காணும் ஐந்து காரணிகள் பரிசீலிக்கப் படுகின்றன.
    • மலைப்பாங்கான மற்றும் கடினமான நிலப்பரப்பு
    • குறைந்த மக்கள் தொகை அடர்த்தி மற்றும்/அல்லது பழங்குடியினர் வாழும் பகுதியின் பங்கு
    • சர்வதேச எல்லைகளை ஒட்டியமைந்த உத்திசார் பகுதி
    • பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த பின்தங்கிய நிலை மற்றும்
    • மாநில அரசு நிதிகளின் சாத்தியமற்ற தன்மை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்