TNPSC Thervupettagam

பீகார் - முதல் உலர் துறைமுகம்

October 28 , 2024 33 days 121 0
  • மாநிலத் தலைநகர் பாட்னாவுக்கு அருகிலுள்ள பிஹ்தா எனுமிடத்தில் பீகாரின் முதல் உலர் துறைமுகம் ஆனது திறக்கப்பட்டுள்ளது.
  • ஒரு துறைமுகம் அல்லது விமான நிலையத்திலிருந்து தொலைவில் அமைக்கப்படும் ஓர் உலர் துறைமுகம் அல்லது உள்நாட்டு கொள்கலன் துறைமுகமானது (ICD), சரக்குப் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளைக் கையாளுதல், சேமிப்பு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிற்கான ஒரு தளவாட வசதி ஆகியவற்றை வழங்குகிறது.
  • இது கடல்/விமானத் துறைமுகங்கள் மற்றும் உள்நாட்டுப் பகுதிகளுக்கு இடையே ஒரு இணைப்புப் பகுதியாகச் செயல்பட்டு, சரக்குகளின் திறம் மிக்கப் போக்குவரத்தினை எளிதாக்குகிறது.
  • இது பொது-தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் இயக்கப்படுகிறது.
  • பீகார் மாநிலமானது உருளைக் கிழங்கு, தக்காளி, வாழைப்பழம், லிச்சி மற்றும் மக்கானா (தாமரை விதைகள்) போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளின் ஒரு முக்கிய உற்பத்தியாளராக உள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில் இந்த மாநிலத்தில் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி பதிவானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்