மாநிலத் தலைநகர் பாட்னாவுக்கு அருகிலுள்ள பிஹ்தா எனுமிடத்தில் பீகாரின் முதல் உலர் துறைமுகம் ஆனது திறக்கப்பட்டுள்ளது.
ஒரு துறைமுகம் அல்லது விமான நிலையத்திலிருந்து தொலைவில் அமைக்கப்படும் ஓர் உலர் துறைமுகம் அல்லது உள்நாட்டு கொள்கலன் துறைமுகமானது (ICD), சரக்குப் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளைக் கையாளுதல், சேமிப்பு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிற்கான ஒரு தளவாட வசதி ஆகியவற்றை வழங்குகிறது.
இது கடல்/விமானத் துறைமுகங்கள் மற்றும் உள்நாட்டுப் பகுதிகளுக்கு இடையே ஒரு இணைப்புப் பகுதியாகச் செயல்பட்டு, சரக்குகளின் திறம் மிக்கப் போக்குவரத்தினை எளிதாக்குகிறது.
இது பொது-தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் இயக்கப்படுகிறது.
பீகார் மாநிலமானது உருளைக் கிழங்கு, தக்காளி, வாழைப்பழம், லிச்சி மற்றும் மக்கானா (தாமரை விதைகள்) போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளின் ஒரு முக்கிய உற்பத்தியாளராக உள்ளது.
2022-23 ஆம் ஆண்டில் இந்த மாநிலத்தில் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி பதிவானது.