TNPSC Thervupettagam

பீபி கொலம்போ திட்டம்

October 22 , 2018 2098 days 653 0
  • ஐரோப்பிய விண்வெளி ஏவுதளமான பிரெஞ்சு கயானாவின் கௌருவில் இருந்து பிரிட்டிஷால் வடிவமைக்கப்பட்ட பீபி கொலம்போ என்ற விண்கலம் விண்ணிற்கு ஏவப்பட்டது.
  • ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் ஜப்பானிய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியான பீபி கொலம்போ என்ற விண்கலம் ஏரியன் 5 என்ற ஏவுவாகனத்தின் மூலம் பூமியை விட்டுச் சென்றது.
  • இது சூரிய ஒளிக் குடும்பத்தின் மிகவும் உள்ளார்ந்த கோளான புதன் கோளைப் பற்றியத் தகவல்களையும் அதனைப் பற்றிய மர்மங்களையும் வெளிக் கொணர்வதற்கான 7 வருடத் திட்டமாகும்.
  • 2025 ஆம் ஆண்டில் இது இரண்டு ஆய்வுகளை மேற்கொள்ளும்.
    • ஐரோப்பாவின் புதன் கோளிற்கான சுற்று வாகனம்
    • ஜப்பானின் புதன் கோளிற்கான காந்தப் புலத்திற்கான சுற்று வாகனம்.
இவையிரண்டும் புதன் கிரகத்தைச் சுற்றியுள்ள சுற்றுவட்டப் பாதைகளில் ஆய்வு மேற்கொள்ளும்.
  • இது வரையில் நாசாவின் மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் ஆகிய இரண்டு விண்கலங்கள் மட்டுமே புதன் கிரகத்திற்குச் சென்றுள்ளன.
  • பீபி கொலம்போ என்ற பெயர், 1974 ஆம் ஆண்டில் மரைனர் 10 என்ற விண்வெளித் திட்டத்தில் முக்கியப் பங்காற்றிய இத்தாலியப் பொறியாளர் மற்றும் விஞ்ஞானியான மறைந்த ஜிசுப்பி பீபி கொலம்போ என்பவரது நினைவாக வைக்கப்பட்டுள்ளது.
பீபி கொலம்போ - முக்கிய அம்சங்கள்
  • மேம்பட்ட மின் அயனி உந்த விசைத் தொழில்நுட்பத்துடன் அனுப்பப்பட்ட கோள்களுக்கிடையிலான முதல் திட்டம் இதுவே முதல்முறையாகும். இத்தொழில்நுட்பம், மின்னூட்டம் செலுத்தப்பட்ட செனான் வாயுவின் பட்டைகளை ஒரு அழுத்துதலில் இரண்டு முறை உமிழும் தொழில்நுட்பமாகும்.
  • இது விண்கலத்தை வேகப்படுத்துவதற்காக உபயோகப்படுத்தப்படாது. மாறாக இது சூரியனின் மிகச்சக்தி வாய்ந்த ஈர்ப்பு விசைக்கு எதிராக தடுப்பு போல செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்