TNPSC Thervupettagam

புகலூர் - திருச்சூர் மின் விநியோக திட்டம்

February 23 , 2021 1280 days 622 0
  • 320 கிலோ வாட் புகலூர் (தமிழ்நாடு) - திருச்சூர் (கேரளா) மின் விநியோக திட்டத்தை பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.
  • இது ஒரு மின்னழுத்த மூல மாற்றி (Voltage Source Convertor - VSC) அடிப்படையிலான உயர் மின்னழுத்த நேரடி மின்னோட்ட வகை (High Voltage Direct Current) திட்டமாகும்.
  • இது அதிநவீன VSC தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள இந்தியாவின் முதல் உயர் மின்னழுத்த நேரடி மின்னோட்ட இணைப்பைக் கொண்டுள்ளது.
  • இந்த VSC அடிப்படையிலான அமைப்பு HVDC XLPE (குறுக்குவாக்காக இணைக்கப்பட்ட பாலி எத்திலீன்) கம்பி வடத்தை மேல்நிலை கம்பி வடங்களுடன் ஒருங்கிணைப்பதாக உள்ளது.
  • வழக்கமான உயர் மின்னழுத்த நேரடி மின்னோட்ட அமைப்புடன் ஒப்பிடும்போது இந்த இணைப்பு அதன் பரிமாற்றத்தில்  ஏற்படும்  இழப்பைச் சேமிப்பதுடன் 35-40% அளவிற்கு குறைவான நிலப் பயன்பாட்டையும் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்