TNPSC Thervupettagam

புகழ்பெற்ற கொங்கனி எழுத்தாளருக்கு சரஸ்வதி சம்மன் விருது

September 1 , 2017 2512 days 837 0
  • 2016 ஆம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மன் விருது , புகழ்பெற்ற கொங்கனி எழுத்தாளர் மகாபலேஷ்வர் செய்ல் (Mahabaleshwar Sail) எழுதிய ஹவ்தான் (Hawthan) என்ற புதினத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • செயில் மராத்தி மற்றும் கொங்கனி ஆகிய இரண்டு மொழிகளில் எழுதும் வல்லமை பெற்றவர் . இவர் நான்கு மராத்தி நாடகங்களையும் , ஏழு கொங்கனி புதினங்களையும் எழுதி உள்ளார்.
  • ஹவ்தான் புதினமானது கோவா பகுதியைச் சார்ந்த குயவர் சமூகத்தின் கலாச்சாரத்தினை எடுத்துரைக்கிறது.
  • சரஸ்வதி சம்மன் விருது ஆண்டுதோறும் சிறந்த கவிதைகள் அல்லது கவிதை இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கப்படுகிறது .
  • இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பட்டியல் எட்டில் (Schedule VIII) குறிப்பிடப்பட்டிருக்கும் இருபத்து இரண்டு மொழிகளில் எழுதப்படும் கவிதை இலக்கியப் படைப்புகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
  • கல்வியின் கடவுளான சரஸ்வதியின் பெயரால் வழங்கப்படும் இவ்விருது இலக்கிய உலகில் மிக உயரியதாக கருதப்படுகிறது.
  • சரஸ்வதி சம்மன் விருது கே.கே.பிர்லா அமைப்பால் 1991 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்