இந்தத் தினமானது, ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது புதன்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது.
இது புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதையும், இந்த ஆபத்தான பழக்கத்தை விட்டுவிட மக்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாள் முதன்முதலில் 1984 ஆம் ஆண்டில் சாம்பல் புதன் (திருநீற்றுப் புதன்) அன்று அனுசரிக்கப்பட்டது.
புகையிலை என்பது பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன்கள் (PAHs), நறுமண அமைன்கள், ஆவியாகும் கரிம ஹைட்ரோகார்பன்கள் மற்றும் பல்வேறு உலோகங்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட புற்றுநோய் காரணிகளின் ஒரு கொடிய கலவை ஆகும்.