புகைப் பனி எதிர்ப்பு வீச்சுப் பொறியானது தில்லியில் அமைக்கப்பட்டு உள்ளது.
மத்திய அல்லது மாநில அரசிடமிருந்து சுற்றுச் சூழல் அனுமதியைப் பெறும் திட்டங்கள் கட்டாயம் புகைப்பனி எதிர்ப்பு வீச்சுப் பொறியை அமைக்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
புகைப்பனி எதிர்ப்பு வீச்சுப் பொறி என்பது காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்காக துகள்களாக உள்ள நீர்த்துளிகளை காற்று வளிமண்டலத்தில் தெளிக்கும் ஒரு சாதனமாகும்.