TNPSC Thervupettagam

புகையிலை விற்பனைப் பொருட்கள் மீதான கடுமையான எச்சரிக்கை ரத்து

December 19 , 2017 2565 days 844 0
  • 2014 சட்டதிருத்த விதியான – புகையிலை பொருட்களின் உறைகளின் மீது 85 சதவிகித அளவில் உடல்நல எச்சரிக்கைக்கான புகைப்படங்களை அச்சிடுவது கட்டாயம் என்ற விதியை கர்நாடக உயர்நீதிமன்றம் அரசியலமைப்பு விதிமுறைகளை மீறுவதாக காரணம் காட்டி ரத்து செய்துள்ளது.
  • ஆனாலும் இந்த விதியில் திருத்தம் செய்வதற்கு முன்னர், 40 சதவிகித அளவிற்கு புகைப்பட எச்சரிக்கை இருக்க வேண்டும் என்று அமல்படுத்தப்பட்ட விதி நடைமுறையில் இருக்கும் என உத்தரவிட்டுள்ளது.
  • மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 85 சதவிகித புகைப்பட எச்சரிக்கை விதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இந்த உத்தரவை BS படீல் மற்றும் BV நாகரத்னா ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ளது.
  • 2016-ம் வருடம் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் [உறையிடல் மற்றும் பெயரிடல்] திருத்த விதிகள், 2014 [The Cigarettes and Other Tobacco Products (Packaging and Labelling) Amendment Rules, 2014 (COTPA)] என்ற விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன.
  • மத்திய சுகாதார அமைச்சகம், அரசியலமைப்பு விதி 19(1)(g) யின் கீழ் உள்ள வியாபாரம் செய்யும் உரிமை மீது காரணமில்லாத கட்டுப்பாடுகளை இது விதிப்பதாகவும் , இந்த உத்தரவு அரசியலமைப்பு விதிகளை மீறும் செயல் என்றும் உயர்நீதிமன்ற அமர்வு கூறியது.
  • உலகளவில் புகைப்பட வடிவிலான உடல்நல எச்சரிக்கைகளுக்கான சராசரி அளவானது முதன்மையான விளம்பரத் தளத்தில் 30 சதவிகிதம் மட்டுமே ஆகும்.
  • உலகின் ஒட்டுமொத்த சிகரெட் பயன்பாட்டில் 51 சதவிகிதத்தை கொண்டுள்ள உலகின் முதல் மூன்று சிகரெட் நுகர்வு நாடுகளான அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் புகைப்பட எச்சரிக்கைகள் இன்றி, வார்த்தைகள் அடிப்படையிலான எச்சரிக்கைகளை மட்டுமே கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்