இது தற்போது ஐக்கியப் பேரரசு, அயர்லாந்து, அமெரிக்கா மற்றும் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கான ஒரு வருடாந்திர இலக்கியப் பரிசாகும்.
ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அயர்லாந்து அல்லது ஐக்கியப் பேரரசில் வெளியிடப்பட்ட புதினங்களுக்கு (நாவல்) இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.
பிரிட்டிஷ் எழுத்தாளர் டக்ளஸ் ஸ்டூவர்ட் தனது முதல் புதினமான ஷக்கி பெயினுக்கு (Shuggie Bain) ஐக்கியப் பேரரசின் புக்கர் பரிசை வென்று உள்ளார்.
2019 ஆம் ஆண்டிற்கான ஐக்கியப் பேரரசின் புக்கர் பரிசு 'தி டெஸ்டமெண்ட்ஸ்' (The Testaments) என்ற புதினத்திற்காக மார்கரெட் அட்வுட் அவர்களுக்கும், ‘கேர்ள், வுமன், அதர்’ (Girl, Woman, Other) என்ற புதினத்திற்காக பெர்னார்டைன் எவரிஸ்டோ அவர்களுக்கும் கூட்டாக வழங்கப் பட்டது.
இது முன்னர் "புக்கர்-மெக்கானெல் பரிசு" (1969-2001) என்றும் அதன் பிறகு மேன் புக்கர் பரிசு (2002-2019) என்றும் அழைக்கப்பட்டது.
1997 ஆம் ஆண்டில், இந்தியாவைச் சேர்ந்த அருந்ததி ராய் அவர்கள் தனது "தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்" (The God of Small Things) என்ற புதினத்திற்காக புக்கர் பரிசை வென்றார்.
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டு, ஐக்கியப் பேரரசு அல்லது அயர்லாந்தில் வெளியிடப்படும் ஒரு புத்தகத்திற்கு சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.
டச்சு மொழியில் எழுதப்பட்ட “தி டிஸ்கம்போர்ட் ஆப் ஈவினிங்” என்ற புத்தகத்திற்காக மரீகே லூகாஸ் ரைன்வெல்ட் என்பவர் 2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ளார்.
இதை மைக்கேல் ஹட்சிசன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உள்ளார்.