தென் கொரியாவின் புசான் நகரில் நடைபெற்ற அரசுகளுக்கிடையேயான ஒரு பேச்சு வார்த்தைக் குழுவின் (INC) 5வது பேச்சுவார்த்தையில் நெகிழி மாசுபாட்டை நன்கு எதிர் கொள்ளும் நோக்கில் ஒரு புதிய ஒப்பந்தத்தினை இறுதி செய்வதற்காக சுமார் 175 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஒன்று கூடினர்.
ஆனால் சவூதி அரேபியா, ரஷ்யா மற்றும் ஈரான் தலைமையிலான புதைபடிவ-எரிபொருள்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் குழுவானது, அதற்கான உற்பத்திக் குறைப்புகளைச் சேர்க்கும் அனைத்து நடவடிக்கையினையும் எதிர்த்தன.
தென் கொரியக் குடியரசின் புசான் என்ற நகரில் நடைபெறும் INC-5 நிகழச்சியினை ஒத்தி வைக்கவும் பின்னர் வேறொரு தேதியில் மீண்டும் ஒரு கூட்டத்தைக் கூட்டவும் அந்த நாடுகள் ஒப்புக் கொண்டன.
INC-5 ஆனது, ஒரு புதிய ஒப்பந்தத்தை உலக நாடுகளுக்கு வழங்குவதற்கான அதன் நோக்கத்தை எட்டவில்லை.