TNPSC Thervupettagam

புதன் கோளில் ஊடு கதிர் வீச்சு துருவ மின்னொளி

July 25 , 2023 491 days 345 0
  • பெபி கொலம்போ விண்கலம் ஆனது, 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதியன்று வெப்பம் மிகுந்த புதன் கிரகத்திற்கு அருகில் முதல் முறையாக நெருங்கிப் பறந்தது.
  • இந்த விண்கலமானது, புதன் கோளின் வட அரைக் கோளத்தின் இரவு நேரப் பகுதியை நெருங்கி, தெற்கு அரைக் கோளத்தின் காலை நேரப் பகுதியை நெருங்கியது.
  • இந்த விண்கலம் மூலம் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்புத் தகவலைப் பயன்படுத்தி, புதன் கிரகத்தின் மேற்பரப்பில் விழும் சூரியனிலிருந்து வரும் எலக்ட்ரான்கள் புதன் கோளின் மீது ஊடு கதிர் வீச்சு துருவ மின்னொளிகளை உருவாக்குகின்றன என்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • புதன் மிகவும் மெல்லிய வளிமண்டலத்தைக் கொண்டுள்ள, அதாவது சூரியக் காற்றில் இருந்து வரும் பெருமளவிலான பல்வேறு எலக்ட்ரான்கள் புதன் கோளின் மேற்பரப்பில் மோதுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்