TNPSC Thervupettagam

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான தேசிய வாரம் – நவம்பர் 15/21

November 24 , 2020 1376 days 357 0
  • மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகமானது இந்த வாரத்தை அனுசரித்தது.
  • இந்த வார அனுசரிப்பின் கருத்துரு, “எல்லா இடங்களிலும் மற்றும் ஒவ்வொரு சுகாதார மையத்திலும் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்குமான தரம், சமத்துவம், கண்ணியம்” என்பதாகும்.
  • இதன் முக்கிய நோக்கம் புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் உயிர் வாழ்தல் மற்றும் அவை வளர்ச்சி அடைதலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகும்.
  • குழந்தை பிறந்த முதல் 28 நாட்கள் அந்த குழந்தை உயிர் வாழ்வதற்கான ஒரு முக்கியக் காலமாகக் கருதப் படுகின்றது.
  • இந்தியாவானது 2035 ஆம் ஆண்டிற்குள் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பை 1000 குழந்தைகளுக்கு 20 என்ற அளவிற்குக் குறைக்க இலக்கு ஒன்றை நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்