TNPSC Thervupettagam

புதினின் ஐந்தாவது ஆட்சிக்காலம்

May 10 , 2024 198 days 188 0
  • மே 07 ஆம் தேதியன்று கிரெம்ளினில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ரஷ்ய அதிபராகப் பொறுப்பேற்று விளாடிமிர் புதின் அவர்கள் தனது ஐந்தாவது ஆட்சிக் காலத்தினைத் தொடங்கினார்.
  • புதின் முதன்முறையாக 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் மற்றும் இரண்டாவது முறையாக 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.
  • அதிபராக இரண்டு முறை பதவி வகித்த பிறகு, இரண்டு முறை தொடர்ந்து அரசத் தலைவராகப் பதவி வகிப்பதற்கு அரசியலமைப்புச் சட்டம் விதித்துள்ள தடையைத் தவிர்ப்பதற்காக 2008 ஆம் ஆண்டில் அவர் மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்றார்.
  • மாஸ்கோவில் ஜனநாயக சார்பு அமைப்புகளின் எதிர்ப்புகள் இருந்த போதிலும் அவர் 2012 ஆம் ஆண்டில் அதிபர் பதவியில் பொறுப்பேற்றதோடு, பின் 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் நான்காவது முறையாக வெற்றி பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்