TNPSC Thervupettagam

புதியப் பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்பு

November 6 , 2024 17 days 76 0
  • நுண் மற்றும் மென்மையான பொருள் அறிவியல் மையத்தின் (CeNS) அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அழுத்த மின் விளைவு கொண்ட பலபடிச் சேர்ம நுண் கூட்டுப் பொருட்களின் அடிப்படையிலான ஒரு பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்பை உருவாக்கி உள்ளனர்.
  • இந்த நுண் கூட்டுப் பொருட்கள் ஆனது அழுத்தம் உணர்தல் மற்றும் ஆற்றல் மாற்றப் பயன்பாடுகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
  • பலபடி சேர்மக் கலவைகளில் நிரப்பிகளாகப் பயன்படுத்தப்படும் போது மிகப்பெரும் பொருத்தமானப் படிக அமைப்பு மற்றும் மேற்பரப்பு பண்புகளைக் கொண்ட உலோக ஆக்சைடு நுண் பொருட்கள் அழுத்த மின் விளைவு எதிர் செயல்பாடுகளை கணிசமாக மேம்படுத்துகின்றன.
  • இதற்காக ஆராய்ச்சியாளர்கள் சிர்கோனியா அடிப்படையிலான இரண்டு உலோக-கரிமக் கட்டமைப்புகளை (UiO-66 மற்றும் UiO-67) ஒருங்கிணைத்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்