TNPSC Thervupettagam

புதிய அணு சக்தி மின்கலன்

January 20 , 2024 182 days 256 0
  • பீட்டாவோல்ட் எனப்படும் ஒரு சீன நாட்டின் புத்தொழில் நிறுவனமானது, மீண்டும் மின்னேற்றம் செய்ய வேண்டிய அவசியமற்ற, 50 ஆண்டுகளுக்கு திறன் பேசிகளுக்கான மின்னாற்றலை வழங்கும் திறன் கொண்ட மின்கலத்தினை உருவாக்கியுள்ளது.
  • இது உலகின் முதல் சிறுவடிவமயமாக்கப்பட்ட அணுசக்தி அமைப்பு என அழைக்கப் படுகிறது.
  • இந்த அணுசக்தி மின்கலமானது ஆற்றல் உருவாக்க, ஒரு நாணயத்தினை விட சிறிய பெட்டகத்தினுள் கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ள 63 அணுக்கரு ஐசோடோப்புகளை பயன்படுத்துகிறது.
  • சிதைவு காலத்திற்குப் பிறகு, 63 ஐசோடோப்புகள் ஒரு நிலையான, கதிரியக்கமற்ற தாமிர ஐசோடோப்பாக மாறுகின்றன என்பதோடு, இதனால் இவை சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத அல்லது மாசுபாட்டை ஏற்படுத்தாத ஒன்றாக கருதப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்