புதிய அரசின் முதல் கூட்டம் ஆனது பிரதமர் அவர்களின் தலைமையில் நடைபெற்று இலாகா ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டது.
இரண்டு பெண்களுக்கு அமைச்சரவைக் குழுவில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டதுடன் ஏழு பெண் தலைவர்கள் அமைச்சரவைக் குழுவில் சேர்க்கப்பட்டனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு அமைச்சரவையில் 11 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
உள்துறை, பாதுகாப்பு, நிதி மற்றும் வெளிவிவகாரங்கள் துறை ஆகிய முன்னணி நான்கு அமைச்சகங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
தொடர்ந்து மூன்றாவது முறையாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக நிதின் கட்கரி பதவியேற்றுள்ளார்.
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப் பட்டு உள்ளார்.
அதே நேரத்தில், அமைச்சரவைக் குழு அமைச்சராகப் பதவியேற்றுள்ள பாஜக தலைவர் J.P. நட்டா, சுகாதார அமைச்சகத்தின் பொறுப்பினையும் ஏற்றுள்ளார்.
ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், மின்சாரம் மற்றும் வீட்டு வசதி போன்ற முக்கிய இலாகாக்களைக் கொண்டிருப்பார்.
10 முன்னணி அமைச்சர்களில், H.D. குமாரசாமி மட்டுமே பாஜக சாராத தலைவராவார்.
அவருக்கு கனரக தொழில்துறைகள் மற்றும் எஃகு அமைச்சகத்தின் பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது.
அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு இரயில்வே அமைச்சர் பதவி மீண்டும் வழங்கப் பட்டுள்ளது.
V. சோமன்னா மற்றும் ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோர் இரயில்வே அமைச்சகத்தின் இணை அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
அன்னபூர்ணா தேவிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் பொறுப்பு அளிக்கபட்டுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த, அரசாங்கத்தின் இளம் அமைச்சரான K. ராம் மோகன் நாயுடு, விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சராக மன்சுக் மாண்டவியா நியமிக்கப் பட்டுள்ளார்.
விளையாட்டுத் துறையின் இளம் இணை அமைச்சராக ரக்சா காட்சே நியமிக்கப்பட்டு உள்ளார்.
L. முருகனுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த சுரேஷ் கோபி பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சகம் ஆகியவற்றின் இணை அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார்.
முதல் முறையாக எந்தவொரு இஸ்லாமியப் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சராக பதவியேற்கவில்லை.
உண்மையில், இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியினைச் சேர்ந்த எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளரும் 18வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.