உயிரியலாளர்கள் மற்றும் உயிரி மருத்துவப் பொறியியலாளர்கள் காலப்போக்கில் எந்தவொரு மாற்றத்தையும் அளவிடக் கூடிய “யாங்க்” என்று அழைக்கப்படும் ஒரு புதிய சொல்லை வரையறுக்க பரிந்துரைத்துள்ளனர்.
மனிதனின் தசை செயல்பாடுகளைப் பற்றி நன்கு அறிய “யாங்க்” என்பதை வரையறுப்பது பயனுள்ளதாக இருக்கும்.
தசை கடினமாதல், முதுகெலும்புக் காயம், பக்கவாதம் மற்றும் பெருமூளை வாதம் ஆகியவற்றின் ஒரு பொதுவான தசைக் குறைபாடான இசிப்பு நிலையை (spasticity) நன்கு புரிந்துகொள்ள ‘யாங்க்’ பயனுள்ளதாக இருக்கும்.