TNPSC Thervupettagam

புதிய ஆலிவ் ரிட்லிகள் அடைகாக்கும் தளம்

December 28 , 2018 2160 days 668 0
  • சமீபத்தில் ஒடிசா வனத் துறையானது கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பஹுடா ஆற்று முகத்துவாரப்பகுதியின் கரையோரப் பகுதியில் உள்ள பஹுடா வசிப்பிடப் பகுதியை ஆலிவ் ரிட்லி ஆமைகள் அடைகாக்கும் தளமாக அறிவித்துள்ளது.
  • இது ருஷிகுல்யா கடற்கரை வசிப்பிடப் பகுதியின் தெற்குப் பகுதியில் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
  • ஒடிசாவின் கஹிர்மாதா கடல்சார் சரணாலயம் மற்றும் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ருஷிகுல்யா கடற்கரை வசிப்பிடப் பகுதி ஆகியவை முக்கியமான ஆலிவ் ரிட்லி அடைகாக்கும் தளங்களாகும்.
  • இவற்றில் கஹிர்மாதா கடல்சார் சரணாலயமானது ஆலிவ் ரிட்லி ஆமைகளின் மிகப்பெரிய அடைகாக்கும் தளமாகும்.
  • ஒடிசாவானது உலகின் ஒட்டுமொத்த ஆலிவ் ரிட்லியில் 50 சதவீதத்திற்கும் ஒட்டுமொத்த இந்திய கடல் ஆமைகளில் 90 சதவீதத்திற்கும் தாயகமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்