மத்திய அரசானது 2024 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு (குறுஞ்செய்திகளை சட்டப் பூர்வமாக இடைமறிப்பு செய்வதற்கான சில நடைமுறைகள் மற்றும் பாதுகாப்புகள்) விதிகளை அறிவித்துள்ளது.
இது சில நிபந்தனைகளின் கீழ், தொலைபேசி செய்திகளை இடைமறித்து அவற்றைக் கண்காணிப்பதற்கு சில அமலாக்க மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
இந்த விதிகள் ஆனது 1951 ஆம் ஆண்டு இந்தியத் தந்தி விதிகளின் 419A விதியினை மாற்றியமைத்துள்ளன.
மத்திய அரசின் இணைச் செயலாளர் பதவி தரத்திற்குக் குறையாத பதவியில் உள்ள ஓர் அதிகாரி, 'தவிர்க்க முடியாத சில சூழ்நிலைகளில்' (அத்தகையச் சூழ்நிலைகளை வரையறுக்காமல்) அத்தகைய இடைமறிப்பினை மேற்கொள்வதற்கான உத்தரவைப் பிறப்பிக்கலாம்.
2023 ஆம் ஆண்டு மத்திய அரசு தொலைத் தொடர்புச் சட்டத்தின் 20(2) என்ற பிரிவின் கீழ், குறிப்பிடப் பட்டுள்ள காரணங்களுக்காக என்று அச்செய்திகளை இடைமறித்துக் கங்காணிப்பதற்காக வேண்டி எந்தவொருச் சட்ட அமலாக்க அல்லது பாதுகாப்பு நிறுவனத்திற்கும் அங்கீகாரம் அளிக்கலாம்.
தற்போது, 'அவசரகால வழக்குகளில்' மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு செய்தி இடைமறிப்பு சார்ந்த நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன.