திருப்பூரில் உள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் மற்றும் விழுப்புரத்தில் உள்ள கழுவேலி பறவைகள் சரணாலயம் ஆகியவை சமீபத்தில் சர்வதேச அங்கீகாரத்தினை பெற்றுள்ளன.
இந்தப் புதிய சேர்க்கைகளின் மூலம், தமிழகத்தில் உள்ள இராம்சர் தளங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது என்ற நிலையில் இது இந்திய மாநிலங்களிலேயே அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள தவா நீர்த்தேக்கம் ஆனது தற்போது இராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவில் உள்ள இராம்சர் தளங்களின் (மொத்த இராம்சர் தளங்களின் பரப்பு 13,58,068 ஹெக்டேர் பரப்பளவு) எண்ணிக்கையை 85 ஆக உயர்த்தியுள்ளது.
1982 முதல் 2013 ஆம் ஆண்டு வரை, நாட்டில் உள்ள இராம்சர் தளங்களின் பட்டியலில் மொத்தம் 26 தளங்கள் சேர்க்கப்பட்டன.
2014 முதல் 2024 ஆம் ஆண்டு வரை, இந்தியா 59 புதிய ஈரநிலங்களை இராம்சர் தளங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.
தற்போது, தமிழ்நாடு அதிகபட்ச இராம்சர் தளங்களை (18 தளங்கள்) கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (10 தளங்கள்) இடம் பெற்றுள்ளது.
ஐக்கியப் பேரரசு (175) மற்றும் மெக்சிகோ (142) ஆகியவை மிகவும் அதிகபட்ச இராம்சர் தளங்களைக் கொண்டுள்ளன.
பொலிவியா நாடானது அதிக பரப்பளவை (148,000 சதுர கிமீ) இந்த உடன்படிக்கையின் பாதுகாப்பை பெறுவதற்கான இப்பட்டியலில் சேர்த்துள்ளது.