புதிய உணவு முறை வழிகாட்டுதல்கள்
May 12 , 2024
199 days
237
- இந்தியர்களுக்கான நன்கு திருத்தப்பட்ட உணவுமுறை வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை வெளியிட்டுள்ளது.
- அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைப் பூர்த்தி செய்வதற்கும், தொற்றாத நோய்ப் பரவலை (NCDs) தடுப்பதற்கும் தேவையான வழிகாட்டுதல்களை இது குறிப்பிடுகிறது.
- இந்த வழிகாட்டுதல்களின்படி, சர்க்கரை உட்கொள்ளல் ஆனது மொத்த ஆற்றல் உட் கொள்ளலில் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
- ஒரு சீரான உணவு முறையானது தானியங்கள் மற்றும் சிறு தானியங்களில் இருந்து 45 சதவீதத்திற்கு மிகாத வகையில் பெறப்படும் கலோரிகளாக இருக்க வேண்டும்.
- மேலும், பருப்பு வகைகள், அவரை வகைகள் மற்றும் இறைச்சியிலிருந்து பெறப்படும் சர்க்கரை அளவானது 15 சதவிகித கலோரிகளாக இருக்க வேண்டும் என்று அது கூறி உள்ளது.
- மீதமுள்ள கலோரிகள் பருப்புகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பாலில் இருந்து பெற வேண்டும்.
- மொத்தக் கொழுப்பு உட்கொள்ளல் ஆனது 30 சதவீத ஆற்றலை விடக் குறைவாகவோ அல்லது சமமாகவோ இருக்க வேண்டும்.
- உடல் தசைகளின் கட்டமைப்பிற்காக துணை புரதச்சத்து உணவுகளை உட்கொள்ள வேண்டாம் என்றும் அது அறிவுறுத்தியுள்ளது.
- இந்தியாவில் உள்ள மொத்த நோய் பாதிப்பில் சுமார் 56.4 சதவீதமானது ஆரோக்கியம் அற்ற உணவு முறைகளால் ஏற்படுகிறது.
Post Views:
237