TNPSC Thervupettagam

புதிய உயிர்க்கோளக் காப்பகங்கள்

July 1 , 2022 752 days 431 0
  • யுனெஸ்கோ அமைப்பானது 9 நாடுகளில் உள்ள 11 புதிய உயிர்க் கோளக் காப்பக மையங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
  • இது முதல் முறையாக சாட், ஜார்ஜியா மற்றும் ஜாம்பியா ஆகிய மூன்று நாடுகளை உட்சேர்த்துள்ளது.
  • ஏற்கனவே இதில் சேர்க்கப்பட்டுள்ள ஸ்பெயினில் உள்ள இரண்டு உயிர்க்கோளக் காப்பகங்களும் இதில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன.
  • புதியக் காப்பகங்கள் இணைக்கப்பட்டதுடன், உலக உயிர்க்கோளக் காப்பகங்களின் கட்டமைப்பானது 134 நாடுகளில் மொத்தம் 738 தளங்களைக் கொண்டுள்ளது.
  • சர்வதேச ஒருங்கிணைப்பு சபையின் 34வது அமர்வில் இந்தக் காப்பகங்களை இணைப்பது பற்றிய முடிவு மேற்கொள்ளப்பட்டது.
  • இது யுனெஸ்கோவின் மனிதனும் உயிர்க்கோளமும் திட்டத்தின் ஒரு ஆளுகைக் குழுகும்.
  • இது யுனெஸ்கோ அமைப்பின் உறுப்பினர் நாடுகளின் 34 பிரதிநிதிகளை உள்ளடக்கி உள்ளது.
  • இந்தச் சபையின் சந்திப்பானது ஜூன் 13 முதல் 17 ஆம் தேதி வரை பாரீஸில் உள்ள யுனெஸ்கோவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
  • மனிதனும் உயிர்க்கோளமும் திட்டமானது நிலையான மேம்பாடு என்றக் கருத்தினை முன் வைத்த ஒரு முன்னோடித் திட்டமாகும்.
  • இது 1971 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் அரசுகளுக்கிடையேயான ஒரு அறிவியல் திட்டமாக நிறுவப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்