- யுனெஸ்கோவின் மனிதன் மற்றும் உயிர்க்கோளக் காப்பகத் திட்டத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பு மன்றமானது 18 நாடுகளில் 25 புதிய தளங்களை உலக உயிர்க்கோளக் காப்பக வலையமைப்பில் சேர்த்துள்ளது.
- இப்போது உலகெங்கிலும் உள்ள 129 நாடுகளில் 714 உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன.
- அன்டோரா (ஆர்டினோ), கபோ வெர்டே (ஃபோகோ மற்றும் மயோ), கொமொரோஸ் (மவாலி), லக்சம்பர்க் (மினெட்), டிரினிடாட் மற்றும் டொபாகோ (வடகிழக்கு டொபாகோ) ஆகிய நாடுகள் இந்த ஆண்டு முதல், மனிதன் மற்றும் உயிர்க்கோளத் திட்டத்தின் வலையமைப்பில் தங்கள் முதல் உயிர்க் கோளக் காப்பகத்துடன் இணைகின்றன.
- நான்கு உறுப்பு நாடுகள் அந்த வலையமைப்பிலிருந்து 11 தளங்களைத் திரும்பப் பெறுமாறு கோரியுள்ளன.
- அவை,
- ஆஸ்திரேலியா - உலுரு ஐயர்ஸ் ராக்-மவுண்ட் ஓல்கா, குரோஜிங்கலாங், ரிவர்லேண்ட் (முன்பு புக்மார்க்), கோஸ்கியுஸ்கோ மற்றும் பெயரிடப் படாத ஒன்று (மாமுங்கரி)
- பல்கேரியா - அலி போடோச், டூப்கி-ஜிந்த்ஜிரிட்சா, மந்தரிட்ஸா மற்றும் பரங்கலிட்சா
- காங்கோ ஜனநாயகக் குடியரசு - லுஃபிரா மற்றும்
- மெக்சிகோ - இஸ்லாஸ் டெல் கோல்போ டி கலிபோர்னியா ஆகும்.
- உயிர்க்கோளக் காப்பகங்கள் ஐ.யூ.சி.என் அமைப்பின் கீழ் வரும் 'ஐந்தாம் வகை பாதுகாக்கப்பட்ட பகுதிகளின்’ கீழ் வருகின்றன.
- உயிர்க்கோளக் காப்பகங்கள் ஒரு பொதுவான தேசியப் பூங்கா அல்லது வனவிலங்குச் சரணாலயத்தை விட இயற்கை வாழ்விடத்திற்கான மிகப் பெரிய பகுதிகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மனிதன் மற்றும் உயிர்க்கோளத் திட்டம் (MAB) பற்றி
- MAB (Man and the Biosphere Programme) என்பது அரசுகளுக்கிடையேயான ஓர் அறிவியல் திட்டமாகும்.
- இது 1971 ஆம் ஆண்டில் பாரீஸைத் தலைமையிடமாகக் கொண்ட யுனெஸ்கோ அமைப்பால் தொடங்கப்பட்டது.
- இது 34 யுனெஸ்கோ உறுப்பு நாடுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சுழல் தலைமை அமைப்பைக் கொண்டு இருக்கின்றது.
- தற்போதைய தலைமை நைஜீரியா ஆகும்.