TNPSC Thervupettagam

புதிய எரிசக்தி கண்ணோட்ட அறிக்கை 2022

December 13 , 2022 714 days 412 0
  • உலகளாவிய, தூய்மை எரிசக்தி ஆராய்ச்சி வழங்குநரான BloombergNEF என்ற நிறுவனமானது 2022 ஆம் ஆண்டிற்கான புதிய எரிசக்தி கண்ணோட்ட அறிக்கை என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • வளர்ந்து வரும் நாடுகளில் இருந்து, குறிப்பாக இந்தியாவில் இருந்து வெளியிடப்படும் பசுமை இல்ல வாயு உமிழ்வானது 2030 ஆம் ஆண்டின் இறுதி வரை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2030 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் மட்டுமே இந்த நாடுகளில் உமிழ்வு அளவானது குறையும்.
  • 2022 ஆம் ஆண்டில் ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் உமிழ்வு அளவுகள் ஏற்கனவே உச்ச நிலையை எட்டியுள்ளதால், அடுத்து வரும் ஆண்டுகளில் உமிழ்வின் அளவுகள் வேகமாகக் குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • சீனாவில், உமிழ்வு அளவுகளானது 2022 ஆம் ஆண்டில் உச்சத்தை எட்டும் என்றும், வளர்ச்சியடைந்த நாடுகளின் போக்குடன் இது இணைவதற்கு முன்பாக சில ஆண்டுகளுக்கு அந்த அளவுகள் நிலைபெறும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
  • உலக வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்குள் கட்டுப்படுத்தச் செய்வதற்கான இலக்கினை எளிதில் அடைய முடியாது.
  • தீவிர முயற்சி நடவடிக்கைகள் எடுக்கப் பட்டால், உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பினை 1.77 டிகிரி செல்சியஸ் வரை நிலையாக பேண முடியும்.
  • இருப்பினும், 2050 ஆம் ஆண்டிற்குள் நிகர சுழிய இலக்கை அடைவதற்கு, தூய எரிசக்தி துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடானது புதைபடிவ எரிபொருட்கள் துறையில் மேற்கொள்ளப் படும் அளவினை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
  • இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் உமிழ்வுகள் 30 சதவிகிதம் குறைய வேண்டும் மற்றும் 2040 ஆம் ஆண்டிற்குள் ஆண்டிற்கு 6 சதவிகிதம் என்ற வீதத்தில் குறைய வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்