கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள பெரியார் புலிகள் காப்பகத்தில் புதிய எறும்பின வகை ஒன்றை ஆராய்ச்சிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியாவின் “எறும்பு மனிதன்” என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற எறும்பியலாளரான (myrmecologist) முஸ்தக் அலியை கவுரவிக்கும் வகையில் அவருடைய பெயர்கொண்டு இந்த புதிய எறும்பினத்திற்கு “தைரன்னோமைர்மெஸ் அலி” (Tyrannomyrmen Alli அல்லது alli) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள இப்புதிய எறும்பினமானது தென்னிந்தியா மற்றும் இலங்கையில் இருந்து தென்கிழக்கு ஆசியா வரை நீண்டுள்ள இந்தோ-மலாய் உயிர் மண்டலத்தில் (Indo-Malayan bio-region) பரவியுள்ள எறும்பு பேரினத்தின் மிர்மிசின் (myrmicine) எனும் அரிய வகை துணைக்குடும்பத்தைச் சேர்ந்தவை ஆகும்.
தற்போது இவை அரிய தைரன்னேமைர்மெஸ் பேரினத்தைச் சேர்ந்த நான்காவது இனமாகும். இந்தியாவில் உள்ள இரண்டாவது தைரன்னோமைர்மெஸ் பேரினத்தை சேர்ந்த இனமாகும்.
எறும்புகளைப் பற்றிய படிப்பு மிர்மிகாலாஜி (myrmecology) எனப்படும்.