TNPSC Thervupettagam

புதிய ஒட்டுண்ணி கண்டுபிடிப்பு - நாகாலாந்து

November 19 , 2017 2433 days 848 0
  • தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் குளோரோபில் அற்ற, பூக்கும் தன்மையுடைய புதிய ஒட்டுண்ணித் தாவர இனத்தை நாகாலாந்தில் கண்டுபிடித்துள்ளனர்.
  • இவை ஹாஸ்டோரியம் (haustorium)  எனும் உறிஞ்சு உறுப்புகளின் மூலம் ஓம்புயிரிகளிலிருந்து (Host) ஊட்டச்சத்துகளை உறிஞ்சி உயிர் வாழத்தக்க தன்மையுடையவை.
  • ஹாஸ்டோரியம் என்பது ஒட்டுண்ணிகளின் சிறப்பு உறுப்பு அமைப்பாகும். இவற்றின் மூலம் ஒட்டுண்ணிகள் தங்களை ஓம்புயிரிகளின் திசுக்களுடன் இணைத்துக் கொண்டு ஊட்டச்சத்துகளை உறிஞ்சிவிடும்.
  • நாகா மக்களின் ”கொன்யாக்” (Konyak) பழங்குடியினரை கவுரவிக்கும் வகையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த ஒட்டுண்ணிக்கு கிளேடோவியா கொன்யாகியானோரம் (Gleadovia Konyakianorum) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • இது ஓர் முழு ஒட்டுண்ணியாகும் (ஹாலோ பாரஸைட் – Haloparasite).
  • இவை தங்களுக்குத் தேவையான முழு ஊட்டச்சத்துகளையும் ஓம்புயிரிகளிலிருந்தே பெறும்.
  • இந்த ஒட்டுண்ணியானது நாகாலாந்தில் 1,500 முதல் 1,600 மீட்டர் கடல் மட்ட உயரத்தில் அமைந்துள்ள பகுதி – மித வெப்ப மண்டல காடுகளில் (semi-evergreen forest) கண்டறியப்பட்டுள்ளது.
  • கிளேடோவியா கொன்யாகியானோரம் தாவரமானது உலகம் முழுவதும் கிளேடோவியா பேரினத்தில் கண்டறியப்பட்டுள்ள நான்காவது இனமாகும்.
  • இவை ஓர் வேர் ஒட்டுண்ணியாகும். இவை 10 செ.மீ. உயரம் வரை வளரக் கூடியது.
  • இவை குழாய் வடிவிலான (tubular) வெள்ளை நிறப் பூக்களை பூக்கவல்லது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்