பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்கால ஓய்வூதியத்திற்குப் பங்களிக்கும் வகையில், சிறார்களுக்கான ஒரு புதிய வகை ஓய்வூதியத் திட்டத்தினை நிதியமைச்சர் அறிமுகப்படுத்தினார்.
சிறார்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் ஆனது NPS வத்சல்யா என அனுசரிக்கப் படுகிறது.
இந்த வழக்கமான ஓய்வூதியத் திட்டத்தில் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் பங்களிப்பினை மேற்கொள்ளலாம்.
குழந்தை 18 வயதை அடைந்தவுடன் இந்தத் திட்டம் வழக்கமான NPS திட்டமாக மாற்றப் படும்.
தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என்பது 18 முதல் 70 வயதிற்குட்பட்டக் குடிமக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் உட்பட அனைத்துக் குடிமக்களுக்குமான ஒரு தன்னார்வ ஓய்வூதிய அமைப்பாகும்.