சென்னையின் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIOT) அடல் பெருங் கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் (ACOSTI) ஆனது, திறந்தநிலை கடல் கூண்டு மீன் வளர்ப்புக் கட்டமைப்பில் உள்ள மீன்களுக்குத் தீவனம் வழங்குவதற்காக ஒரு புதிய கடலடி உணவு வழங்கீட்டு அமைப்பை நிறுவியுள்ளது.
இது மீன்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பதற்காக என் ஓர் கட்டமைப்பையும் தொடங்கியுள்ளது.
இந்தக் கட்டமைப்புகள் ஆனது, சமீபத்தில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தொடங்கப்பட்டுள்ளன.
இவை ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தின் கீழ் உள்ள தேசிய இலக்குகள் மற்றும் உள்ளடக்கிய நீலப் பொருளாதாரத்திற்கான தொலைநோக்குத் திட்டத்துடன் ஒன்று படுகின்றன.
இந்த மீன் வளர்ப்புக் கூண்டுகள் ஆனது,சுமார் 7 மீ முதல் 10 மீ வரையிலான ஆழத்தில் நிறுவப் பட்டுள்ளதால், மீன் தீவனத்தைப் பாதுகாப்பாக அந்தந்த இடங்களுக்குக் கொண்டு செல்வதற்காக NIOT மையமானது நீர் வெளியேற்றி என்ற அடிப்படையில் செயல்படும் வகையில் உருவாக்கியுள்ளது.
இந்த வடிவமைப்பு ஆனது, மிதவை சூரிய மின்னாற்றல் உற்பத்தி அமைப்பின் மூலம் இயக்கப்படுவதால், இது உணவளிக்கும் ஒரு செயல்முறையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஆற்றல் நுகர்வையும் கணிசமாகக் குறைக்கிறது.
சென்னையில் அமைந்துள்ள தேசியப் பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) ஆனது, புவி அறிவியல் துறை அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி சங்கமாக 1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நிறுவப்பட்டது.