மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனமானது (CMFRI - Central Marine Fisheries Research Institute), கேரளாவின் இந்தியக் கடற்கரையில் ஒரு புதிய காரங்கிட் மீன் இனத்தினை அடையாளம் கண்டுள்ளது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட இந்த மீன் ‘ராணி (குயின்) மீன்’ என்ற வகையைச் சேர்ந்தது.
இந்த மீனின் அறிவியல் பெயர் ஸ்காம்பிராய்ட்ஸ் பெலாகிகஸ் (Scomberoides pelagicus) என்பதாகும்.
உள்ளூர் மொழியில் இந்த மீன் ‘பொல வட்டா’ என்று அழைக்கப்படுகிறது.