ஓடிசாவின் சிலிகா ஏரியில் டெமோர்செஸ்டியா இனத்தைச் சேர்ந்த இறால் போன்ற ஒரு புதிய வகை கடல் வாழ் பன்முகக் காலிகள் இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
இது இந்தியக் கடற்கரையோரத்தில் காணப்படும் பிளாட்டோர்செஸ்டினே என்ற துணைக் குடும்பத்தைச் சேர்ந்தது.
இந்தக் கண்டுபிடிப்பு டெமோர்செஸ்டியா இனத்தில் மேலும் ஒரு இனத்தைச் சேர்த்து, இக்குழுவில் உள்ள உலகளாவிய இனங்களின் எண்ணிக்கையை ஆறாக உயர்த்தி உள்ளது.
தாலிட்ரிடே குடும்பம் பன்முகக் காலிகள் இனத்தின் மிகவும் பழமையான குழுக்களில் ஒன்றாகக் கருதப்பட்டதோடு இது ஜுராசிக் காலத்திலிருந்து கிரகத்தில் இருந்ததாக நம்பப் படுகிறது.