TNPSC Thervupettagam

புதிய கண்டுபிடிப்புகள் 2021

July 11 , 2022 741 days 513 0
  • இந்திய விலங்கியல் ஆய்வு அமைப்பானது 2021 ஆம் ஆண்டில் 68% விலங்கினங்களைக் கண்டுபிடித்துள்ளது.
  • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இருந்து கண்டறியப்பட்ட குரோசிடுரா நார்கொண்டமிகா என்ற ஒரு வெள்ளை-பல் மூஞ்சூறு, புதிதாக அடையாளம் காணப் பட்ட ஒரு பாலூட்டி இனமாகும்.
  • விட்டேக்கரின் பூனைப் பாம்பு என்றும் அழைக்கப்படும் பொய்கா விட்டகேரி, 2021 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க ஊர்வன இனமாகும்.
  • இது தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் கண்டறியப்பட்டது.
  • ஹைமனோப்டெரா எனப்படும் பூச்சிகளின் பட்டியல் மிகவும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமாக இருந்தது.
  • இது ஒரு புதிய இனம் உட்பட 80 இனங்களை உள்ளடக்கியது.
  • ஹைமனோப்டெரா குழுவில் மரபூச்சிகள், குளவிகள், தேனீக்கள் மற்றும் எறும்புகள் அடங்கும்.
  • இந்திய தாவரவியல் ஆய்வின்படி, மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் வடகிழக்குப் பகுதிகள் போன்ற பகுதிகளில் 28% இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • மாநில வாரியான பகுப்பாய்வில், கேரளாவில் 51 குழுமங்கள் உட்பட அதிக எண்ணிக்கையிலான கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
  • அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்