TNPSC Thervupettagam

புதிய காட்டு இன வாழை

November 9 , 2017 2601 days 949 0
  • மியூசா பரம்ஜிடியானா எனும் தாவரவியல் பெயருடைய புதிய காட்டு இன வாழையை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தாவரவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • வட அந்தமானின் கிருஷ்ணபுரி வனத்தில் இக்காட்டு வாழை இனம் கண்டறியப்பட்டுள்ளது.
  • உண்ணத்தக்க, இனிப்புடன் புளிப்பு சுவையுடைய, புடைத்த வடிவமுடைய பல விதைகளைக் கொண்ட, படகு போன்ற வடிவமுடைய வாழைப் பழங்களை காய்க்கும் இக்காட்டு இன வாழையானது 9 மீட்டர் வரை வளரக் கூடியது.
  • சர்வதேச பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் (IUCN-International Union For Conservation Of nature) சிவப்பு பட்டியலின் (Red List) கீழ் இக்காட்டு இன வாழையானது மிகவும் அழியும் தருவாயில்  உள்ள தாவர இனமாக  (Critically Endangered) பட்டியலிடப்பட்டுள்ளது.
  • இது வரை அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளின் இரு இடங்களில் மட்டுமே இவை கண்டறியப்பட்டுள்ளன.
  • இந்தியாவின் இந்திய தாவரவியல் கணக்காய்வு நிறுவனத்தின் (Botanical Survey Of India) தற்போதைய இயக்குநரான பரம்ஜித் சிங்-ஐ கவுரவிக்கும் விதத்தில் இப்புது காட்டு இன வாழைக்கு “மியூஸா பரம்ஜிடியானா ” என பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்